ADDED : பிப் 06, 2025 11:30 PM
அலிப்பூர்: மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர், நண்பரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
வடக்கு டில்லியின் ஜிந்த்பூர் நாலா அருகே உள்ள சவுத்ரி ஹீரா சிங் கி சமாதி அருகே அடையாளம் தெரியாத ஒருவர் நீண்ட நேரமாக படுத்திருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்தனர். சடலத்தை கைப்பற்றி விசாரணையை துவக்கினர்.
இதில் அவர், உத்தரபிரதேசத்தின் எட்டாவைச் சேர்ந்த பகவான் தாஸ், 30, என்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை செய்யப்பட்டவரின் நண்பர் சுபாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் மோதிக் கொண்டதாகவும், அப்போது சுபாஷ் சரமாரியாக அடித்ததில் பகவான் தாஸ் உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.