ADDED : பிப் 05, 2026 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வடக்கு டில்லி கோபால்பூரில் வசிப்பவர் மின்டு,28. ரிக் ஷா டிரைவர். மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால், அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறு ஏற்படும்.
நேற்று காலை மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்தார். வீட்டு அருகில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறினார். தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்.
தகவல் அறிந்து, தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் வந்தனர். மின்சாரத் துறை உதவியுடன் மின்டு பத்திரமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து, மின்டு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

