ADDED : ஜன 12, 2025 10:51 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே நகர்ந்த ரயிலில் ஓடி ஏறும் போது, தவறி விழுந்த வாலிபர் படுகாயமடைந்தார்.
தமிழகம் கூடலுார் பகுதியைச் சேர்ந்தவர் லதீஷ், 30, இவர் நேற்று அதிகாலை சேலம் செல்வதற்கு, திருச்சூர் வடக்காஞ்சேரி ரயில் நிலையத்திலிருந்து, கன்னியாகுமாரி- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி உள்ளார். ரயில் ஒற்றைப்பாலம் ரயில் நிலையம் வந்தடைந்த போது இறங்கிய லதீஷ், தண்ணீர் வாங்குவதற்கு நடைமேடையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். இச்சமயம் நகர்ந்த ரயிலில் ஓடிச்சென்று ஏறினார். அப்போது, கால் தவறி விழுந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். இதைக்கண்ட நடைமேடையில் உள்ளோர், கூச்சலிட்டு ரயிலை நிறுத்தினர்.
படுகாயமடைந்த லதீஷை மீட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து ஒற்றைப்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.