சாலையில் செல்லும் போது தகராறு துப்பாக்கியால் சுட்டவர் தப்பியோட்டம்
சாலையில் செல்லும் போது தகராறு துப்பாக்கியால் சுட்டவர் தப்பியோட்டம்
ADDED : ஏப் 04, 2026 01:44 AM

பரீதாபாத்,ஹரியானாவில், சாலையில் வேகமாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டி, மற்றொருவர் மீது துப்பாக்கியால் சுட்டு தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
டில்லி அருகே உள்ள ஹரியானா மாநிலத்தின் பரீதாபாத் நகரில் உள்ள பாலாஜி கல்லுாரி சாலை மற்றும் வல்லபகார் பகுதியில், விவேக் என்பவர் தன் இரு சக்கர வாகனத்தில் நேற்று காலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரின் அருகே வந்த மற்றொரு வாகன ஓட்டி, மெதுவாக செல்லுமாறு கூறினார். அந்த நபரின் இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் பெண் ஒருவர் இருந்தார்.
அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பெண்ணுடன் சென்ற வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, விவேக் மீது சுட்டார்.
இதில், காதின் ஓரத்தில் குண்டு உராசியபடி சென்றது. லேசாக காயமடைந்தார். இதனால் கோபம் கொண்ட விவேக், அந்த நபர் கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை பறித்தார். அந்த களேபரத்தில், இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பையை அந்த நபர் தவற விட்டார்.
அந்த இடத்திலிருந்து வேகமாக சென்ற அவர், அந்த பெண்ணுடன் தன் இரு சக்கர வாகனத்தில் தப்பினார். அவர் விட்டுச் சென்ற பொருட்களை ஆராய்ந்த போலீசார், அவரை தேடி வருகின்றனர். விரைவில் அந்த நபரை பிடித்து விடுவோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
