ADDED : ஜன 07, 2025 06:43 AM
துமகூரு: பைக்குடன் ஹேமாவதி கால்வாயில் விழுந்து, இறந்த நபரின் உடல் 28 கி.மீ., தொலைவில் அடித்து செல்லப்பட்டிருந்தது.
துமகூரு, திப்டூரின், கே.பி.கிராஸ் அருகில் வசித்தவர் அஜிப் உல்லா, 33. இவர் இம்மாதம் 2ம் தேதி, கே.பி.கிராசின் குந்துார் அருகில் ஹேமாவதி கால்வாய் பாலத்தில் பைக்கில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், கால்வாயில் விழுந்தது.
பைக்குடன் அஜிப் உல்லா, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், அவரை தேட துவங்கினர்.
சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு பின், குந்துார் அருகில் உள்ள கால்வாயில் பைக் கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றுப்பகுதிகளில் தேடியும், உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடியதில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, 28 கி.மீ., துாரத்தில் அஜிப் உல்லாவின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் மீட்டனர்.

