தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பூட்டிய வீட்டிற்குள் ஆண் மர்மச்சாவு

பூட்டிய வீட்டிற்குள் ஆண் மர்மச்சாவு

பூட்டிய வீட்டிற்குள் ஆண் மர்மச்சாவு


UPDATED : நவ 26, 2026 03:54 PM

ADDED : நவ 26, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 03:54 PM ADDED : நவ 26, 2026 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: புல் பிரஹலாத்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், பூட்டிய அறைக்குள் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தென் கிழக்கு டில்லியில் உள்ள புல்பிரஹலாத் பகுதியில், சுங்கி எண் 2 பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒருவர் குடியிருந்து வந்துள்ளார். ஆனால், இரண்டு நாட்களாக அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில், ஒரு அறை பூட்டிக்கிடந்தது. அதை உடைத்து உள்ளே சென்ற போது, ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சடலத்தை கைப்பற்றிய போலீசார், இறப்புக்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரழந்தவரின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவும், அந்த நபரின் தனிப்பட்ட விபரங்களை தெரிந்து கொள்ளவும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த நபகர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே, எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியும் என்றும் போலீசார் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us