தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வேகமாக வந்த காரால் வாக்குவாதம் மெதுவாக போக சொன்னவர் கொலை

வேகமாக வந்த காரால் வாக்குவாதம் மெதுவாக போக சொன்னவர் கொலை

வேகமாக வந்த காரால் வாக்குவாதம் மெதுவாக போக சொன்னவர் கொலை


ADDED : நவ 27, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: அதிவேகமாக கார் ஓட்டியதை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

டில்லி, ஷகூர் பூர் பகுதியில் உள்ள ஜே.ஜே., காலனியை சேர்ந்த யோககேஷ், 27 என்பவர், அப்பகுதியில் நடந்த திருமணவிழாவில் கலந்து கொண்டார். பின் நண்பர்களுடன் வீடு திரும்பினார். ஜி பிளாக் சாலையில், இன்று (நவ.,27) அதிகாலை 1:00 மணியளவில் நண்பர்கள் குழு நின்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஐ 20 கார் அதிவேகமாக வந்துள்ளது. அதை பார்த்து நண்பர்கள் சத்தம் போட்டுள்ளனர்.

காரில் இருந்தவர்கள் திரும்ப வந்து விசாரித்த போது, காரில் மெதுவாக செல்லும் படி கூறியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காரில் வந்தவர்களில் ஒருவர் கத்தியால், யோகேஷின் கழுத்தில் குத்தியுள்ளார். பின், மற்றவர்களுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

காயமடைந்த யோகேஷை, அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் உள்ள மகாராஜா அகிரசென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், யோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மருத்துவமனையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மோதலில் ஈடுபட்ட இரு கும்பலும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

‘குற்றவாளிகளை அடையாளம் கண்டு விட்டோம். அவர்களை தேடி வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us