பெண்குரலில் போன் ஆப்பில் மோசடி: கற்பை இழந்த மாணவிகளின் பரிதாபம்
பெண்குரலில் போன் ஆப்பில் மோசடி: கற்பை இழந்த மாணவிகளின் பரிதாபம்
UPDATED : மே 26, 2024 10:35 AM
ADDED : மே 26, 2024 09:16 AM

போபால்; ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக பெண்குரலில் மொபைல் போன் ஆப்பில் பேசி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
போபால் அருகே சித்தி மாவட்டத்தை சேர்ந்தவர் மில் தொழிலாளி பிராஜேஷ் குஷ்வாகா. இவர் கல்லூரி பேராசிரியராக சில கல்லூரி மாணவிகளிடம் பெண் குரலில் பேசுவார். ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக சொல்வார். இதனை கேட்டு ஒரு இடத்திற்கு வரசொல்வார். வரும் பெண்களை ஒரு நபர் வந்து பைக்கில் அழைத்து சென்று அவரது வீட்டில் விடுவார் அவர் பலாத்காரம் செய்துள்ளார். இதில் தப்பிய மாணவிகள் சிலர் அளித்த புகாரின் பேரில் பிராஜேஷ் குஷ்வாகா மற்றும் அவனது கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், இவரது வீட்டை இடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், அம்மாநில இன்ஸ்பெக்டர் ஜெனரல் மகேந்திரஷிகார்வார் கூறினார். மேலும் இது போன்ற குரல் மாற்றும் ஆப் கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.