தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கொலை வழக்கில் தேடப்பட்டவர் 28 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 28 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்

கொலை வழக்கில் தேடப்பட்டவர் 28 ஆண்டுகளுக்கு பின் சிக்கினார்


UPDATED : நவ 23, 2026 05:42 PM

ADDED : நவ 23, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 05:42 PM ADDED : நவ 23, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: கொலை வழக்கில் தேடப்பட்டவர், 28 ஆண்டுகளுக்கு பின் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

பீஹார் மாநிலம், மதுபானியை சேர்ந்தவர் மோஹித், 22. கடந்த, 1998ம் ஆண்டு, டில்லி, புத் விஹார் குடிசைப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். அதே ஆண்டு, மார்ச் 13ம் தேதி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ராமு,54, என்பவரை தேடி வந்தனர். போலீசிடம் சிக்காமல் இருக்க மஹாராஷ்டிரா, பஞ்சாப், பீஹார் மற்றும் உத்தர பிரதேசம் என பல மாநிலங்களுக்கு ராமு அடிக்கடி இடம்பெயர்ந்து கொண்டே இருந்தார். இந்நிலையில், ராமுவை தேடப்படும் குற்றவாளியாக டில்லி தீஸ் ஹஸாரி நீதிமன்றம், 2000, ஜனவரி 24ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, நாடு முழுதும் அனைத்து மாநில போலீசுக்கும், ராமு குறித்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், 2000, மார்ச் 30ம் தேதி, ராமு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், ராமு குறித்த தகவல்கள் சமீபத்தில் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆனால், பதிவேடுகளில் ராமுவின் போட்டோ எதுவும் இல்லை. இருப்பினும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்தனர்.

அதன் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பதுங்கி இருந்த ராமுவை, 21ம் தேதி கைது செய்தனர். தன், 26 வயதில் கொலை செய்து விட்டு தலைமறைவான ராமு, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், ஒன்பது ஆண்டுகளும், பஞ்சாபில், 12 ஆண்டுகளும், பீஹாரில், ஏழு ஆண்டுகளும் கூலி வேலை செய்து வந்துள்ளார். தற்போது, உ.பி., மாநிலம் அயோத்தியில் தங்கியிருந்த போது போலீசிடம் பிடிபட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த ராமு, டில்லி, புத் விஹாரில், நிலக்கரி ஆலையில் வேலை செய்த போது, உடன் பணியாற்றிய மோஹித்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

விசாரணைக்குப் பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us