ADDED : ஜூன் 06, 2025 09:21 PM
புதுடில்லி:கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி, பாவனா அவுச்சாண்டி கிராமத்தைச் சேர்ந்த அமர்தீப் என்ற அமர் லோச்சாப், 48, ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர், மஹாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், டில்லி மாநகரப் போலீசின் சிறப்புப் படையினர், 5ம் தேதி மாலை முண்ட்கா திக்ரி-ஜரோடா சாலையில் உள்ள ஒரு கால்வாய் அருகே, அமர்தீப்பை சுற்றி வளைத்தனர். அவர் தப்பி ஓடினார். சிறப்புப் படையினர் விரட்டிச் சென்று கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாதா கபில் சங்வான் கும்பலைச் சேர்ந்த அமர்தீப், 2024ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி பரிதாபாத்தில் சூரஜ்பன் என்ற பல்லு தின்பூரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.