உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 21, 2026 12:11 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: டில்லி, பீதம்புராவை சேர்ந்தவர் அர்மான் ஷோகீன், 23. கடந்த 17ம் தேதி, வடமேற்கு டில்லி, ஜஹாங்கிர்புரியில், 'தார்' ஜீப்பில் அதிவேகமாக சென்றார். அப்போது, அர்மானை அப்பகுதி மக்கள் துரத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க, வண்டியை மேலும் அதிவேகமாக ஓட்டினார்.
அப்போது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தீப் சிங் மற்றும் போலீஸ்காரர் ஆஷிஷ் சங்வான் ஆகியோர் மீது, ஜீப் மோதியது. ஆனால், வண்டியை நிறுத்தாமல் அர்மான் தப்பிச் சென்றார் .
கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த ஜஹாங்கிர்புரி போலீசார், அர்மான் ஷோகீனை, நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.
