தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஓடையில் விழுந்தவர் பலி

ஓடையில் விழுந்தவர் பலி

ஓடையில் விழுந்தவர் பலி


ADDED : ஜூன் 29, 2025 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2025 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு கீழச்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீத் 59. இவர் நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே உள்ள கடைக்கு சைக்கிளில் சென்றார்.

திரும்பி வீட்டிற்கு வரும் வழியில், கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் இருந்து அவர் சாலையோரம் உள்ள ஓடையில் விழுந்தார். இதில் அவர் தாழ்வான பகுதியில் சிக்கி மூழ்கினார்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் நடத்திய நீண்ட நேர தேடுதலில், அவரது உடலை மீட்டனர். தகவல் அறிந்து வந்த கொல்லங்கோடு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் நேற்று பிரேதப்பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us