sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவி, மகள்களை கொன்றவர் பிடிபட்டார்

/

மனைவி, மகள்களை கொன்றவர் பிடிபட்டார்

மனைவி, மகள்களை கொன்றவர் பிடிபட்டார்

மனைவி, மகள்களை கொன்றவர் பிடிபட்டார்


ADDED : ஆக 09, 2025 10:41 PM

Google News

ADDED : ஆக 09, 2025 10:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:குடும்பத் தகராறில், மனைவி, இரண்டு மகள்களையும் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

வடகிழக்கு டில்லி கரவால் நகரில் வசிப்பவர் பர்தீப் காஷ்யப்,29. மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்தார். கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு இருவருக்கும் வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடும் ஆத்திரம் அடைந்த பர்தீப், மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்து விட்டு தப்பினார்.

நேற்று காலை, 7:00 மணிக்கு அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவல்படி, கரவால் நகர் போலீசார் வந்து, காஷ்யபின் 28 வயது மனைவி, ஏழு மற்றும் 5 வயது உடைய இரண்டு மகள்கள் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முகுந்த் விஹாரில்- பதுங்கி இருந்த பர்தீப் காஷ்யபை கைது செய்தனர். மனைவி, குழந்தைகளை கொலை செய்ததை காஷ்யப் ஒப்புக்கொண்டார்.

காஷ்யப் குடும்பத்தின் பின்னணி மற்றும் தகராறு குறித்து, அக்கம் பக்கத்தினர் மற்றும் காஷ்யபின் உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us