பெண்ணை 50 துண்டு போட்டவர் ஒடிசாவில் துாக்கிட்டு தற்கொலை
பெண்ணை 50 துண்டு போட்டவர் ஒடிசாவில் துாக்கிட்டு தற்கொலை
ADDED : செப் 26, 2024 05:20 AM

பெங்களூரு: நம் அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர் மஹாலட்சுமி, 29. இவரது குடும்பத்தினர் பெங்களூருவில் வசிக்கின்றனர். இரண்டு ஆண்டுக்கு முன், கணவர் ஹேமந்த் தாசை பிரிந்தார். எட்டு மாதமாக வயாலிகாவல் பகுதியில் வசித்தார்.
கடந்த 21ம் தேதி மஹாலட்சுமி வசித்த வீட்டில் இருந்து துர்நாற்றம்வீசியது. வயாலிகாவல்போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 'பிரிஜ்'ஜில் 50 துண்டுகளாக வெட்டப்பட்ட மஹாலட்சுமியின் உடல் பாகங்கள் இருந்தன.
மஹாலட்சுமியை கொலை செய்ததாக,முக்தி ரஞ்சன் ராய், 30, என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஒடிசாவின் பத்ராக் மாவட்டம், துசிரி கிராமத்தில் நேற்று மாலை, மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு போலீசார் கூறுகையில், 'ஜவுளிக் கடையில் மஹாலட்சுமியுடன் ரஞ்சன் ராயும் பணியாற்றினார். இருவரும் நெருங்கிப் பழகினர். 'அதே கடையில் வேலை செய்த வேறு ஒருவருடன் மஹாலட்சுமி நெருங்கிப் பழகியதால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்' என்றனர்.