வழக்கறிஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது
வழக்கறிஞர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது
ADDED : மார் 04, 2026 02:21 AM

புதுடில்லி : சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கோஷ்டியை சேர்ந்த வழக்கறிஞர் தீபக் காத்ரி என்பவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக, ரோஹித் சோலங்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25ம் தேதி, வடக்கு டில்லியின் காஷ்மீரே கேட் பகுதியில், தீபக் காத்ரி என்ற வழக்கறிஞர் மீது, மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டது. அதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ரோஹித் சோலாங்கி கும்பல் தான் அந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதை அறிந்தனர்.
ரோஹித் சோலங்கியுடன் கார் ஒன்றில் பயணித்த, ஐந்து பேர் கும்பல் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த வழக்கறிஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, வழக்கறிஞர் தீபக் காத்ரி மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்று, நவீன் பாக்சர் என்ற ரவுடி, சமூக வலைதளம் ஒன்றில் உரிமை கோரியுள்ளார். அந்த பதிவு, உண்மை தானா என போலீசார், விசாரிக்கின்றனர்.
