பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் இன்று மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி
பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் இன்று மணிமேகலை பிரசுர புத்தக கண்காட்சி
ADDED : ஜன 19, 2025 06:57 AM
ஹலசூரு: மணிமேகலை பிரசுரத்தின் புத்தக விற்பனை கண்காட்சி, இன்று பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது.
ஹலசூரில் உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் இன்று மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, நடக்கும் புத்தக விற்பனை கண்காட்சியை இன்று மாலை 4:00 மணிக்கு பெங்களூரு தமிழ் சங்க தலைவர் கோ.தாமோதரன் துவக்கி வைக்கிறார். முதல் விற்பனையை சங்க செயலர் சம்பத் துவக்கி வைக்க, 'டெஸ்சால்வ்' நிறுவன அதிபர் ரவி வீரப்பன் பெற்றுக் கொள்கிறார்.
மாலை 6:00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்குகிறது. மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் முனைவர் ரவி தமிழ்வாணன் வரவேற்கிறார். காஞ்சிபுரம் ஆத்ம சங்கமம் சஞ்சீவி ராஜா சுவாமிகள் அருளாசி வழங்குகிறார்.
கர்நாடக குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., ஹரிசேகரன் தலைமை வகிக்கிறார். நகரத்தார் சங்க தலைவர் வள்ளியப்பா, தினச்சடர் நாளிதழ் ஆசிரியரும், அதிபருமான அமுதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
நபிபியா கவுரவ பிரஜை டாக்டர் அக்சய் துள்சியான், 'பொன்னியின் செல்வன்' முதல் பிரதியை பெறுகிறார்.
சிறப்பு விருந்தினர்களாக, எம்.வி.ஜே., மருத்துவ கல்லுாரி தாளாளர் மோகன், எழுத்தாளரும், ஆராய்ச்சியாளருமான விஞ்ஞானி டில்லிபாபு, சக்தி இன்ஜினியரிங் நிறுவனத்தின் டி.விஜயன், வங்கியாளரும், எழுத்தாளருமான எஸ்.ஜெகன்நாதன் பங்கேற்கின்றனர்.
லேடீஸ் ஸ்பெஷல் மாத இதழ் நிறுவனரும், ஆசிரியருமான கிரிஜா ராகவன், டாக்டர் பூரநேசன் ராஜு, கவிஞர் அமரன் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆடிட்டர் குரு பிரசாத் உதவி செய்துள்ளார். கண்காட்சி விற்பனை பொறுப்பாளராக மணிமேகலை பிரசுரம் சொக்கலிங்கம் உள்ளார்.
மேலும், விபரங்களுக்கு 99401 71285 என்ற மொபைல் போனில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த புத்தக விழாவில், தினமலர் வாரமலர் அந்துமணியின் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.