மணிப்பூர்: குண்டு வெடிப்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,மனைவி பலி
மணிப்பூர்: குண்டு வெடிப்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,மனைவி பலி
UPDATED : ஆக 11, 2024 10:15 PM
ADDED : ஆக 11, 2024 08:26 PM

குவஹத்தி : மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.மனைவி பலியானார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரு சமூகத்தினரிடையே பிரிவினை நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இருப்பினும் நீருபூத்த நெருப்பாக மாநிலத்தில் ஆங்காங்கே கலவரம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில் வசித்து வருபவர் முன்னாள் எம்,எல்.ஏ., ஹாக்கிப். இவரது மனைவி சாருபாலா என்ற மெய்டேய், இவர் குக்கி சோ சமூகத்தை சேர்ந்தவர்.
சம்பவத்தன்று ஹாக்கிப் தனது மகளுடன் வீட்டிற்குள் இருந்துள்ளார்.மனைவி சாருபாலா வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் இருந்தார். அப்போது எதிர்தரப்பினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் சாருபாலா காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பலியானார். முன்னாள் எம்.எல்,ஏ,வும் அவரது மகளும் வீட்டினுள்ளே இருந்ததால் காயமின்றி தப்பித்தனர்.
மேலும் மாநிலத்தின் தெங்னோபல் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் குக்கி கிராம இளைஞர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் மூன்று பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.