மணிப்பூரில் ஓட்டு இயந்திரம் சேதம்: 11 ஓட்டுச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
மணிப்பூரில் ஓட்டு இயந்திரம் சேதம்: 11 ஓட்டுச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
ADDED : ஏப் 21, 2024 12:28 AM

இம்பால் : மணிப்பூரில் 11 ஓட்டுச்சாவடிகளில் 22-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மற்றும் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள, 102 லோக்சபா தொகுதிகளில் நேற்று முன்தினம் ஓட்டுபதிவு நடந்தது.
இதில் மணிப்பூரில், இன்னர் மணிப்பூரில் நடந்த தேர்தலில், 68 சதவீதம் அளவுக்கு ஓட்டு
பதிவானது. இங்குள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் மொய்ரங்காம்பு சாஜேப் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே ஓட்டுபதிவின்போது மர்மநபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஓட்டு போட வந்த வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். ஓட்டு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து இப்பகுதியில் 11 ஒட்டுச்சாவடிகளில் வரும் 22-ம் தேதி மறு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

