மணீஷ் சிசோடியா ஜாமின் மனு டில்லி ஐகோர்ட்டில் நாளை முடிவு
மணீஷ் சிசோடியா ஜாமின் மனு டில்லி ஐகோர்ட்டில் நாளை முடிவு
ADDED : மே 02, 2024 07:05 PM

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமின் மனு மீது டில்லி ஐகோர்ட்டில் நாளை (மே.03) தீர்ப்பு வெளியாக உள்ளது.
டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நடந்துள்ள முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்தாண்டு பிப்.26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
இதில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்க துறை வழக்குப்பதிவு செய்தது. திகார் சிறையில் உள்ளார். வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
ஜாமின் கோரி கடந்த மாதம் 30-ம் தேதி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு செய்தார். மேல் முறையீட்டு மனு மீது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை (மே.03) உத்தரவு பிறபிக்கப்பட உள்ளது.

