ADDED : டிச 27, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எளிமையான பின்னணியில் இருந்து பொருளாதார மேதையாக உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகள் வகித்தவர், நம் பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர். பார்லிமென்டில் அவர் ஆற்றிய உரைகள் அறிவுப்பூர்வமானவை. நம் நாட்டின் பிரதமராக இருந்தபோது, மக்களின் வாழ்வை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர்.-- நரேந்திர மோடி, பிரதமர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து நாட்டின் நிதி அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த டாக்டர் மன்மோகன் சிங், நம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்

