மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறும்
மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறும்
UPDATED : டிச 28, 2024 06:20 AM
ADDED : டிச 28, 2024 06:10 AM

புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு, டில்லியில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் இன்று காலை 11:45 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மன்மோகன் சிங் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்து, டில்லியில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
எனினும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மறைந்த தலைவர்களுக்கு நினைவிடம் கட்ட டில்லியில் இடம் ஒதுக்கக்கூடாது என, 2013ல் சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.

