sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய மாணவர் படையில் இணையுங்க; பிரதமர் மோடி அழைப்பு!

/

தேசிய மாணவர் படையில் இணையுங்க; பிரதமர் மோடி அழைப்பு!

தேசிய மாணவர் படையில் இணையுங்க; பிரதமர் மோடி அழைப்பு!

தேசிய மாணவர் படையில் இணையுங்க; பிரதமர் மோடி அழைப்பு!

13


ADDED : நவ 24, 2024 01:03 PM

Google News

ADDED : நவ 24, 2024 01:03 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.

116 வது மான்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவுக்கு கயனா நாட்டிற்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுவாக உள்ளது. இந்தியாவில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கும் கயானாவில் 'மினி பாரத்' உள்ளது. சுமார் 180 ஆண்டுக்கு முன், இந்தியர்கள் கயானாவிற்கு வயல்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று கயானாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர்.

அர்ப்பணிப்பு

என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றல், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு அவசியம். தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது 162வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மாபெரும் இளைஞர்கள் மாநாடு நடத்தப்படும். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களை அரசியலுடன் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இளைஞர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

பாராட்டு

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க தமிழகத்தில் நடைபெறும் முயற்சிக்கு பாராட்டுக்கள். சென்னையில் உள்ள கூடுகள் என்ற தன்னார்வ அமைப்பு, மாணவர்கள் உதவியுடன் கூடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மரத்தால் ஆன கூடுகளை தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களின் வெளிப்புறங்களில் கூடுகள் பொருத்தப்படுகின்றன. சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இந்த கூடுகள் பெரும் உதவியாக உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us