UPDATED : மார் 18, 2017 08:00 AM
ADDED : மார் 18, 2017 02:48 AM

லக்னோ: உத்தரபிரதேச முதல்வராக மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்கா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல் களில், உ.பி.,யில், பா.ஜ., மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பா.ஜ., 312 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள், 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இந்நிலையில்உத்தர பிரதேச, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று( 18-ம் தேதி) மாலை நடக்க உள்ளது.
இதில் மத்திய இணை அமைச்சர் மனோஜ்சின்கா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மூத்த தலைவர்களிடயே ஒரு மித்த கருத்து எட்டப்பட்டதாகவும்,இதையடுத்து , உ.பி., முதல்வராக மனோஜ் சின்கா தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
