sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மார்ச் 1, 2027

/

மார்ச் 1, 2027

மார்ச் 1, 2027

மார்ச் 1, 2027


ADDED : ஜூன் 05, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஜூன் 5- 'தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ல் துவங்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

'நேஷனல் சென்சஸ்' எனப்படும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக கடந்த 2019ம் ஆண்டில் 8,754 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 3,941 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தான், அரசுகளின் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதால், தாமதமின்றி அதை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

அதோடு, ஜாதிவாரியான கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வளர்ச்சிக்கு அது அவசியம் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.

மத்திய அரசு பதிலே சொல்லாமல் தவிர்த்ததால், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சில ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின.

இந்த சூழ்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது.

கடந்த 2011 கணக்கெடுப்பில் ஜாதி குறித்த தகவல் சேகரிக்கப்பட்டாலும், இதுவரை அந்த விபரம் வெளியிடப்படவில்லை. இம்முறை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 1ல் துவங்கும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை, வரும் 16ம் தேதி வெளியிடப்படும்.

எனினும், பனிப்பொழிவுக்கு இலக்காகும் ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், லடாக் மாநிலங்களில் முதல் கட்டமாக 2026, அக்டோபர் 1ம் தேதியே கணக்கெடுப்பு பணி துவங்கும். நாட்டின் மற்ற மாநிலங்களில் இந்த வேலைகள் 2027, மார்ச் 1ல் துவங்கும்.






      Dinamalar
      Follow us