ADDED : நவ 19, 2024 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக் பகுதியில் உள்ள ஆதி சக்தி மாரியம்மன் கோவிலில் சுவர்ண விநாயகர், வள்ளி- - தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி பிராண பிரதிஷ்டாபனை மஹா உற்சவம், திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
நாளை இரவு 9:30 மணிக்கு வாஸ்து கணபதி ஹோமம்; 21ம் தேதி காலையில் மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மகா யாகம், கும்பாபிஷேகம்; இதை தொடர்ந்து ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம்; மதியம், அன்னதானம்.
மாலையில் ஸ்வர்ண விநாயகர், கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை மாட வீதி ஊர்வலம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ஆதிசக்தி மாரியம்மன் கோவில் கமிட்டியினர்செய்துள்ளனர்.

