ADDED : அக் 18, 2026 07:27 PM
எட்மண்டன்: கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வடஅமெரிக்கா நாடான கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி அளிக்கும் வெய்ன்ரைட் ராணுவ தளம் உள்ளது. இதை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ராணுவ தளத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுற்றியுள்ள கிராமப்பகுதிகளுக்கும் பரவியது.
தீ விபத்து பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்களுடன் ராணுவத்தினரும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
``கடந்த 25 ஆண்டுகளில ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்து இது என்றும் தீ விபத்துக்கான காரணம் என்ன என விசாரணை நடத்தப்படுவதாகவும்,'' கனட ராணுவ அமைச்சர் டேவிட் மெக்குயின்டி தெரிவித்தார்.
