sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நொய்டா தொழிற்சாலையில் பயங்கர தீ: சிக்கிய தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சி

/

நொய்டா தொழிற்சாலையில் பயங்கர தீ: சிக்கிய தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சி

நொய்டா தொழிற்சாலையில் பயங்கர தீ: சிக்கிய தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சி

நொய்டா தொழிற்சாலையில் பயங்கர தீ: சிக்கிய தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சி


ADDED : மார் 12, 2026 08:55 AM

Google News

ADDED : மார் 12, 2026 08:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.நொய்டாவின் செக்டர் 4க்கு அருகிலுள்ள ஹரோலா பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகளவில் இருந்ததால், தீ வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவியது. சம்பவ இடத்திலிருந்து கரும்புகை மூட்டம் வெளியேறியது.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தொழிற்சாலையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ஊழியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், இரவுப் பணியில் இருந்த சுமார் 10 முதல் 15 ஊழியர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தொழிலாளர்கள் 2வது மாடியிலிருந்து கீழே குதித்தும் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.

தொழிற்சாலையில் இருந்த பிளாஸ்டிக் மற்றும் ரசாயனப் பொருட்கள் எரிவதால் வெளியாகும் நச்சுப் புகையால், அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.






      Dinamalar
      Follow us