ADDED : ஏப் 11, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று காலை இந்த குடியிருப்பின் ஏழாவது மாடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தீ மளமளவென எட்டு மற்றும் ஒன்பதாவது மாடிகளுக்கும் பரவியது.
இதனால் அங்கு வசித்தவர்கள் புகையில் சிக்கி தவித்தனர்.
அவர்கள் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டதால், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.
பின் அவர்கள், மொட்டை மாடியில் சிக்கித் தவித்த 18 பேரை பாதுகாப்பாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

