டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 3 பேர் பரிதாப பலி
டில்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 3 பேர் பரிதாப பலி
ADDED : ஜூன் 10, 2025 01:36 PM

புதுடில்லி: டில்லி அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி துவாரகாவில் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் இருந்து தப்பிக்க 7வது மாடி பால்கனியில் இருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் குதித்தனர். இவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் யாஷ் யாதவ் மற்றும் அவரது 10 வயது மகன், மகள் ஆகிய 3 பேர் உயிழந்தனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
யாதவின் மனைவியும், மூத்த மகனும் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பித்தனர். இவர்கள் லேசான காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் டில்லியில் தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.