தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பெரியளவில் முறைகேடு!

பெரியளவில் முறைகேடு!

பெரியளவில் முறைகேடு!


ADDED : மே 27, 2026 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 11:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மோசடியில் உள்ள உண்மைகளை வெளிக் கொணர, சுதந்திரமான நீதித் துறை விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்.

ராகுல் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு!


பார்லிமென்டில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி, 2029 லோக்சபா தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடும் தொகுதிகளில், 33 சதவீதத்தை பெண்களுக்கு கட்டாயம் ஒதுக்கும். இது வெறும் முழக்கம் அல்ல. நாட்டின் எதிர்காலத்திற்கான கட்சியின் உறுதிமொழி.

நாரா லோகேஷ் ஆந்திர அமைச்சர், தெலுங்கு தேசம் கட்சி

பொறுப்புடன் செயல்படணும்!


தேர்தல் கமிஷனின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செல்லும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், அந்த பணிக்கு எதிராக அவதுாறு பரப்பிய காங்., ராகுலின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது தன்னை சுயபரிசோதனை செய்து, அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

சுதான்ஷு திரிவேதி செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us