sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பேரன் வெற்றிக்காக 'மாஸ்டர் பிளான்'

/

பேரன் வெற்றிக்காக 'மாஸ்டர் பிளான்'

பேரன் வெற்றிக்காக 'மாஸ்டர் பிளான்'

பேரன் வெற்றிக்காக 'மாஸ்டர் பிளான்'


ADDED : மார் 15, 2024 10:33 PM

Google News

ADDED : மார் 15, 2024 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன் தொகுதியில், ம.ஜ.த., வேட்பாளரை வெற்றி பெறவைக்கும் நோக்கில், தேசிய தலைவர் தேவகவுடா கடூரில், பா.ஜ., தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு ஹாசன், கோலார், மாண்டியா ஆகிய தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

ஹாசன் தொகுதியில், தற்போதைய எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் களமிறங்கும் வாய்ப்புள்ளது. இவரை தோற்கடித்து தேவகவுடா, குமாரசாமிக்கு பின்னடைவு ஏற்படுத்த வேண்டும் என, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கூட்டணி கட்சியான பா.ஜ.,விலும் கூட, சில

தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே ஹாசனில் பேரனின் வெற்றிக்காக, தேவகவுடா திட்டம் வகுக்கிறார். முதற்கட்டமாக பா.ஜ., - ம.ஜ.த., பிரமுகர்கள், தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

ஹாசன் தொகுதி வேட்பாளரின் வெற்றியில், கடூர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதே தொகுதியில் தேவகவுடா, சமாதான பேச்சு நடத்தவுள்ளார். பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட, காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டத் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான கெம்பராஜு மகன் சேத்தன் உட்பட, சிலர் ம.ஜ.த.,வில் இணைய முடிவு செய்துள்ளனர்.

இது பிரஜ்வலுக்கு பலமாக இருக்கும் என்று அக்கட்சியினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்

.- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us