தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மே.வங்க முதல்வரின் உதவியாளர் கொலை வழக்கு; சிபிஐயிடம் விசாரணை ஒப்படைப்பு

மே.வங்க முதல்வரின் உதவியாளர் கொலை வழக்கு; சிபிஐயிடம் விசாரணை ஒப்படைப்பு

மே.வங்க முதல்வரின் உதவியாளர் கொலை வழக்கு; சிபிஐயிடம் விசாரணை ஒப்படைப்பு


ADDED : மே 12, 2026 06:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 06:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை மாநில போலீசிடம் இருந்து சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., சார்பில் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார்.

அவரது உதவியாளர் சந்திரநாத் ராத், கடந்த 6ம் தேதி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் மத்தியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை மேற்கு வங்க போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து கூலிப்படையாக செயல்பட்டு ராத்தை கொலை செய்த பீஹார், உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூவரை மேற்கு வங்க சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

மேற்கு வங்கத்துக்கு கொண்டு வரப்பட்ட அவர்கள் மூவரையும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களுக்கு 13 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்தக் கொலை வழக்கு, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us