ADDED : அக் 25, 2024 11:48 PM

உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள
ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கூட்டணி வரலாற்று
வெற்றி பெறும். இந்த வெற்றி, 2027 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்.
பா.ஜ., படுதோல்வியை சந்திக்கும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
வெளியேற வேண்டும்!
மத்தியில் உள்ள பா.ஜ., ஆட்சியில் விலைவாசி அதிகரித்து விட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் ேஹாட்டல்களில் சாப்பாடு விலை, 52 சதவீதம் அதிகரித்துஉள்ளது. பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதே இதற்கு தீர்வு.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
மூத்த தலைவருக்கு அவமதிப்பு!
மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி. அவரை, பிரியங்காவின் வேட்புமனு தாக்கலின் போது உள்ளே அனுமதிக்காமல், அவரது சொந்த கட்சியினரே அவமதித்து விட்டனர். இது போன்ற அவமதிப்பு அவருக்கு பல முறை நடந்துள்ளது.
பசவராஜ் பொம்மை
கர்நாடக முன்னாள் முதல்வர், பா.ஜ.,