ADDED : மே 21, 2024 10:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: மருத்துவ சிகிச்சைக்காக மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா வந்த வங்கதேச எம்.பி., திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி எம்.பி. அன்வருல் அசீம் அனார். இவர் கடந்த 12-ம் தேதி வங்கதேசத்திலிருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா வந்துள்ளார்.
கோல்கட்டாவில் உள்ள பாராநகரில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தநிலையில் கடந்த 13-ம் தேதி முதல் மாயமானார். இது பற்றி போலீசில் புகார் கூறப்பட்டுள்ளதாக வங்கதேச தூதரகம் தெரிவித்துள்ளது.

