sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும் தெருநாய் விவகாரத்தில் மேயர் ராஜா இக்பால் சிங் உறுதி

/

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும் தெருநாய் விவகாரத்தில் மேயர் ராஜா இக்பால் சிங் உறுதி

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும் தெருநாய் விவகாரத்தில் மேயர் ராஜா இக்பால் சிங் உறுதி

உச்ச நீதிமன்ற தீர்ப்பு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும் தெருநாய் விவகாரத்தில் மேயர் ராஜா இக்பால் சிங் உறுதி

1


ADDED : ஆக 23, 2025 01:23 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:“தெருநாய்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு நூறு சதவீதம் செயல்படுத்தப்படும்,” என, மேயர் ராஜா இக்பால் சிங் கூறினார்.

தேசிய தலைநகர் பிராந்தியத்தில் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் பிடித்து, காப்பகங்களில் அடைத்து பராமரிக்க, டில்லி உயர் நீதிமன்றம், 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை விலங்குகள் நல ஆர்வலர்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் மீது, 14ம் தேதி விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில், 'தெருநாய் களுக்கு கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்தி அதே பகுதியில் மீண்டும் விடுவது உட்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

எதிர்பார்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, டில்லி மாநகராட்சி மேயர் ராஜா இக்பால் சிங், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவற்றை நூறு சதவீதம் செயல்படுத்துவோம்.

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் மாநகராட்சி முழு பலத்துடன் செயல்படும். மேலும், ஆக்ரோஷமாக தாக்கும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

நாய்கள் நம் அனைவருக்கும் பிரியமானவை. ஆனால், அவற்றால் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

மாநகராட்சியின், 20 விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்கள் முழுவீச்சில் செயல்படும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் முழு கவனம் செலுத்தப்படும்.

உயர் நீதிமன்ற உத்தரவிட்ட போது, விலங்கு நல ஆர்வலர்கள் ஏராளமானோர் வருத்தம் தெரிவித்தனர். பலர் போராட்டங்கள் நடத்தி, போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் இப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அவர்களும் திருப்தி அடைந்துள்ளனர்.

மனிதர்களைப் போலவே, தெருநாய்களைப் பாதுகாப்பதிலும் மாநகராட்சி கவனம் செலுத்தும். ஆக்ரோஷமான அல்லது மக்களைத் தாக்கும் தெருநாய்களை மட்டும் காப்பகங்களில் அடைத்து பராமரிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொசு ஒழிப்பு ரயில் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த டில்லி மாநகராட்சி மற்றும் வடக்கு ரயில்வே ஆகியவை இணைந்து, 'கொசு ஒழிப்பு ரயில்' அறிமுகம் செய்துள்ளது.

புதுடில்லி ரயில் நிலையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கொசு ஒழிப்பு ரயிலை மேயர் ராஜா இக்பால் சிங் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:

கொசு முட்டையை அழிக்கும் மருந்து தெளிக்கும் 'பவர் ஸ்ப்ரேயர்'கள் பொருத்தப்பட்டுள்ள லாரிகள், ரயிலின் கார்டு பெட்டிக்கு அடுத்ததாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த தெளிப்பான் வாயிலாக தண்டவாளங்களின் இருபக்கமும், -60 மீட்டர் துாரத்துக்கு மருந்து தெளிக்கப்படும்.

மழையால் தண்டவாளம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தேங்கும் நீரில் கொசு இனப்பெருக்கம் நடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது வெறும் ரயில் மட்டுமல்ல, டில்லி மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் கேடயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒத்துழைப்பு டில்லி மாநகராட்சி கமிஷனர் அஸ்வினி குமார் பேசுகையில், “இந்த கூட்டு நடவடிக்கையால் லட்சக்கணக்கான மக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்.

துாய்மை மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டு மாநகராட்சியில் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன.

டில்லியில் வசிக்கும் ஒவ்வொருவரும் மாநகராட்சியின் இந்த துாய்மைப் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும். வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும்,” என்றார்.

கூடுதல் கமிஷனர் பங்கஜ் நரேஷ் அகர்வால், பொது சுகாதார அதிகாரி அசோக் ராவத் மற்றும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.

அறிவியல் பூர்வ தீர்ப்பு: மேனகா


தெருநாய்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நீண்டகாலமாக எதிர்பார்க்கப் பட்டதுதான். இந்தத் தீர்ப்பு,அறிவியல் பூர்வமானது.இந்த தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாய்களுக்கு கருத்தடை செய்து, வேறு இடங்களில் விடுவதால், எந்தப் பயனும் இல்லை. முற்றிலும் அந்நிய இடத்தில் நாயை விடும்போது, வலி மட்டுமின்றி பயத்துடன் திரியும். அந்தச் சூழ்நிலையில்தான் பயத்தில் அது கடிக்கிறது.
கருத்தடை செய்து அது வசித்த இடத்திலேயே விடுவதுதான் சரியான முடிவு. தெருநாய்களின் எண்ணிக்கையை குறைக்க, கருத்தடை செய்வது மட்டும்தான் ஒரே தீர்வு. அதேபோல, குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக என்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். அந்த இடத்தில் மட்டுமே அங்கு வசிப்பவர்கள் தங்கள் உணவுகளை வைக்க வேண்டும்.
-மேனகா, முன்னாள் மத்திய அமைச்சர்



ஜந்தர் மந்தரில் கொண்டாட்டம்


தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, விலங்கு நலர் ஆர்வலர்கள் மற்றும் தெருநாய் பராமரிப்பாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தெரு நாய் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு நாளான நேற்று காலையிலேயே, ஜந்தர் மந்திரில் விலங்கு நல ஆர்வலர்கள் திரண்டனர். தெருநாய்களுக்கு ஆதரவாக தீர்ப்பு இருக்க வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்தனர். தீர்ப்பு வெளியானவுடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன் மிகவும் சோகமாக இருந்த பலர், தீர்ப்புக்குப் பின், ஆனந்தக் கண்ணீருடன் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், 'ஹர ஹர மகாதேவ்' என, முழக்கமிட்டு கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர். தெருநாய் பராமரிப்பாளர் ஒருவர், 'இந்த தீர்ப்பு இரக்கத்தின் வெற்றி. இனி, எங்கள் குழந்தைகளை எந்தக் காப்பகத்துக்கும் அனுப்ப வேண்டியதில்லை. இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சமூக விலங்குகளைப் பராமரிக்க சரியான வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது'என்றார்
மற்றொருவர், 'காலையில் இருந்தே மிகவும் பதட்டமாக இருந்தோம். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பில், கருணையும் அறிவியலும் கைகோர்த்துள்ளது'என்றார். அதேபோல, 'ஹியூமன் வேர்ல்ட் பார் அனிமல்ஸ் இந்தியா' நிர்வாக இயக்குனர் அலோக்பர்ணா சென்குப்தா கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். உச்ச நீதிமன்றா வழிகாட்டுதலை அரசு பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும்,”என்றார்.



முன்னாள் அமைச்சர் வரவேற்பு


பா.ஜ., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் கூறுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை அரசு விரைவில் துவக்கும் என எதிர்பார்க்கிறேன். மேலும், நாய்களுக்கு என ஒதுக்கப்படும் இடங்களில் மட்டுமே மக்கள் உணவு வழங்க வேண்டும்,”என்றார்.



கருத்தடை மோசடி


காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் தத் கூறுகையில், “தெருநாய் விவகாரத்தில், மிகச் சிறந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த -14 ஆண்டுகளில், நாய்களுக்கு கருத்தடை என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மாநகராட்சி செலவு செய்துள்ளது. ஆனால், நாய்களின் எண்ணிக்கை குறையவே இல்லை. நாய் கருத்தடை திட்டத்தில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. அப்பாவி நாய்களின் பெயரில் அதிகாரிகள் செய்த மோசடி குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.



எல்லா மாநிலத்துக்கும் பொருந்தும்


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில், நாய்களுக்கு கருத்தடை செய்து அதே இடத்திலேயே விடுவிக்க வேண்டும் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தெருநாய் விஷயத்தில் அரசு அதிகாரிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கில், அனைத்து மாநிலங்களையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தெருநாய் விவகாரம் தொடர்பான வழக்குகளில் இந்தத் தீர்ப்பை முன்னுதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.
--நனிதா சர்மா உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்








      Dinamalar
      Follow us