டில்லி மாநகராட்சி இடைத்தேர்தல்; 12 இடங்களில் 7ல் பாஜ வெற்றி
டில்லி மாநகராட்சி இடைத்தேர்தல்; 12 இடங்களில் 7ல் பாஜ வெற்றி
ADDED : டிச 03, 2025 11:39 AM

புதுடில்லி: டில்லி மாநகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 7ல் பாஜ வெற்றி பெற்றது. ஆம்ஆத்மி 3 இடங்களில் வெற்றி பெற்றது.
டில்லி மாநகராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளுக்கு கடந்த நவ., 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 38.51 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. அதில் 7 இடங்களில் பாஜ வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். துவர்கா-பி, ஷாலிமர் பாக், சாந்தினி சவுக், அசோக் விஹார், கிரேட்டர் கைலாஷ், திச்சோன் கலன், வினோத் நகர் ஆகிய இடங்களை பாஜ கைப்பற்றியது.
அதேபோல, நரைனா, முந்த்கா மற்றும் தக்ஷின்புரி ஆகிய 3 வார்டுகளை ஆம்ஆத்மியும், சங்கம் விஹார் வார்டை காங்கிரசும், சாந்தினி மஹால் வார்டை அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியும் வென்றன.
இந்தத் தேர்தலில் ஷாலிமர் பக் வார்டில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் அனிதா ஜெயின் 10,101 ஓட்டுகள் வித்தியாசத்திலும், துவர்கா பி வார்டில் போட்டியிட்ட மனிஷா தேவி 9.,100 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். டில்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் அடைந்த வெற்றியை பாஜவினர் கொண்டாடி வருகின்றனர்.

