ADDED : பிப் 13, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகர்கஞ்ச்:அடுத்த நிதியாண்டிற்கான 17,000 கோடி பட்ஜெட்டை எம்.சி.டி., எனும் டில்லி மாநகராட்சி நேற்று தாக்கல் செய்தது.
சிறப்பு பட்ஜெட் கூட்டத்தில் எம்.சி.டி., ஆணையர் அஸ்வனிகுமார், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை அவர் பட்டியலிட்டார்.
சுகாதாரத்திற்காக 4,907.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித் துறைக்கு 1,693.73 கோடியும், சுகாதாரப் பராமரிப்புக்காக 1,833.51 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பசுமை இடங்கள் மற்றும் நகர்ப்புற நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் தோட்டக்கலைத் துறைக்கு 393.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

