பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம்
பஹல்காம் தாக்குதல்: வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம்
ADDED : ஏப் 24, 2025 05:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பாக வெளிநாட்டு தூதர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கி கூறியுள்ளது.
டில்லியில் நடந்த இந்தக்கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பியயூனியன், இத்தாலி, கத்தார், ஜப்பான், சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாட்டு தூதர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பஹல்காமில் நடந்த தாக்குதல் மற்றும் அதன் பின்னணி குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமாக எடுத்துக் கூறினார். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா எடுத்து வரும் பதில் நடவடிக்கைகள் குறித்தும், துாதர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கூட்டம் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.