தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தங்கவயலில் அம்மை நோய்

தங்கவயலில் அம்மை நோய்

தங்கவயலில் அம்மை நோய்


ADDED : பிப் 27, 2024 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல், : தங்கவயலில் சிறார்களுக்கு அம்மை நோய் பரவி வருகிறது.

கோடை காலத்தில் தான் பெரும்பாலும் சிறுவர்களுக்கு அம்மை நோய் ஏற்படுவது வழக்கம். ஆனால், தங்கவயலில் கோடைக்கு முன்னதாகவே உரிகம், சிவராஜ் நகர், அம்பேத்கர் நகர், கோரமண்டல், உரிகம் பேட்டை, மஸ்கம், ராபர்ட்சன்பேட்டை ஆகிய இடங்களில் இந்த சிறிய அம்மை நோய் பரவியுள்ளது. தங்கவயல் கார்னேஷன் டவுன் அருகில் உள்ள தொற்றுநோயியல் மருத்துவமனையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுரேஷ் குமார் கூறியதாவது:,

அம்மை நோய் சிறுவர்களுக்கு ஏற்படுவது உண்டு. இந்த வேளையில், காய்ச்சல் வரும். நான்கைந்து நாட்கள் நீடிக்கும். உடலில் சில இடங்களில் கொப்புளங்கள் ஏற்படும். இத்தகைய சிறுவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இது தொற்றுநோய்; எளிதில் மற்றவர்களுக்கு தொற்றிக்கொள்ளும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கவயலில் உள்ள தொற்றுநோயியல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

இத்தகைய சிறுவர்களுக்கு பழங்கள், பழ ரசங்கள், நிறைய தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். சுத்தமான உடைகளை அணிவிப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us