ADDED : ஜூலை 02, 2024 01:12 AM

புதுடில்லி: 24 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பிரபல சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு கோர்ட் 5 மாதம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 2000ம் ஆண்டு மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்போதைய மக்களுரிமைக்கான தேசிய கவுன்சில் தலைவராக வி.கே. சக்சேனா இருந்தார். இது தொடர்பாக சக்சேனா, என்.ஜ.ஓ. அமைப்பைச் சேர்ந்தவர் மேதாபட்கர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். மேதா பட்கர் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
டில்லி சாகேத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கு 24 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில், மேதா பட்கர் குற்றவாளி என மே மாதம் கோர்ட் அறிவித்தது.
அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் மேதா பட்கருக்கு 5 மாத சிறை தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ராகவ் சர்மா தீர்ப்பளித்தார்.