முதுகுவலியால் அவதிப்படும் தர்ஷனுக்கு மருத்துவ படுக்கை
முதுகுவலியால் அவதிப்படும் தர்ஷனுக்கு மருத்துவ படுக்கை
ADDED : அக் 18, 2024 07:32 AM
பல்லாரி: பல்லாரி சிறையில் முதுகுவலியால் அவதிப்படும், நடிகர் தர்ஷனுக்கு மருத்துவ வசதி கொண்ட, படுக்கை கிடைத்துள்ளது.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33 கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் உள்ளார். ஜாமின் கேட்டு பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார். அவரது மனுவை கடந்த 14ம் தேதி, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் நேற்று தர்ஷன் வக்கீல்கள் மனு செய்தனர். அந்த மனு வரும் 22ம் தேதி, விசாரணைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் சிறையில் உள்ள, தர்ஷன் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பல்லாரியின் விம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தர்ஷனுக்கு மருத்துவ வசதி கொண்ட படுக்கை, தலையணை, நாற்காலி வழங்கலாம் என்று, சிறை அதிகாரிகளுக்கு, டாக்டர்கள் பரிந்துரைந்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் விம்ஸ் மருத்துவமனையில் இருந்து, மருத்துவ வசதி கொண்ட படுக்கை, தலையணை, நாற்காலி சிறைக்கு எடுத்து வரப்பட்டு, தர்ஷனுக்கு வழங்கப்பட்டது.