ADDED : டிச 03, 2024 11:34 PM
பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆயுர்வேத மருத்துவ மாணவி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெள்ளையானி ஊக்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷின் மகள் நிதா, 20. இவர், பாலக்காடு மாவட்டம் வேலந்தாவளம் அருகே உள்ள அகல்யா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, 10:30 மணிக்கு, அவர், தங்கியிருந்த கல்லூரி விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை மாணவியர் கண்டனர். தகவல் அறிந்து வந்த கொழிஞ்சாம்பாறை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கல்லுாரி நிர்வாகம் மற்றும் சக மாணவியரிடம் போலீசார் விசாரித்த போது, முதலாம் ஆண்டு தேர்வில், வெற்றி பெற முடியாத மன வருத்தத்தில் இருந்த மாணவி நிதா, மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, தெரியவந்தது. இது குறித்து, கொழிஞ்சாம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.