ADDED : மார் 25, 2026 02:37 AM

மருந்துகள் விலை குறைவு!
நாடு முழுதும் மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்க, 11 ஆண்டுகளில், 18,646 ஜன் ஆஷாதி கேந்திரா மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், வெளி சந்தையை காட்டிலும் மருந்துகளின் விலை, 50 - 80 சதவீதம் வரை குறைவு. இத்திட்டத்தில் தற்போது, 2,110 மருந்துகள் கிடைக்கின்றன.
நட்டா மத்திய அமைச்சர், பா.ஜ.,
நிரூபணமாகி விட்டது!
கேரளாவில், தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றில் பா.ஜ.,வின் முத்திரை இடம் பெற்றுள்ளது. தேர்தல் கமிஷனை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி விட்டது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. ஒருவழியாக பூனைக்குட்டி வெ ளியே வந்து விட்டது.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., கட்சி
அனுமதி மறுப்பது ஏன்?
மேற்காசிய போர் குறித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. இது குறித்து விளக்கம் கேட்க எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. பிரதமரின் உரை உண்மைகளை மறைக்கும் விதமாகவும் ஒருதலைபட்சமாகவும் இருந்தது.
ஜான் பிரிட்டாஸ் ராஜ்யசபா எம்.பி., மார்க்.கம்யூ.,
