வெற்றி பெற்ற பா.ஜ.,வினர் ஜெ.பி.நட்டாவுடன் சந்திப்பு
வெற்றி பெற்ற பா.ஜ.,வினர் ஜெ.பி.நட்டாவுடன் சந்திப்பு
ADDED : பிப் 11, 2025 08:07 PM
புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ., வேட்பாளர்கள், அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டாவை நேற்று சந்தித்தனர். முதல்வர் பதவி யாருக்கு? என்ற பரபரப்பு நிலவும் சூழ்நிலையில், மரியாதை நிமித்தமான சந்திப்பு என அக்கட்சியினர் கூறினர்.
இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய வேட்பாளர்கள் கூறியதாவது:
சட்டசபைக் கூட்டம் குறித்தோ, முதல்வர் பதவி குறித்தோ இந்தக் கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், கட்சித் தலைவரை சந்திக்க விரும்பினர். அதனால், பார்லி., கட்டடத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நட்டாவைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு 15ம் தேதி நாடு திரும்புகிறார். அதன்பிறகே, சட்டசபைக் கூட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

