ADDED : ஜன 18, 2025 11:17 PM
பரேலி:உத்தர பிரதேசத்தில், மனநலம் குன்றிய பெண், வீட்டின் கழிவறையில் இருந்த 'ஆசிட்'டை குடித்ததால் உயிரிழந்தார்.
உ.பி., மாநிலம் பரேலி மாவட்டம் கிராத்பூர் கிராமத்தில் வசித்தவர் குமாரி பில்குஷ்,19. மனநலம் குன்றிய குமாரியை அவரது மாமா பிரேம்பால் வளர்த்து வந்தார்.
கடந்த 16ம் தேதி இரவு, கழிவறையில் இருந்த ஆசிட்டை குடித்தார். கதறித் துடித்த குமாரியை, உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி செய்து, பரேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குமாரி பில்குஷ், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மரணம் அடைந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் மருமகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டதாக பிரேம்பால் கூறினார். உடற்கூறு ஆய்வுக்குப் பின், குமாரி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

