ADDED : பிப் 08, 2025 06:21 AM
பீன்யா: பெங்களூரு கெம்பாபுராவில் இருந்து ஜே.பி. நகர் 4வது பேஸ் வரை புதிய மெட்ரோ பாதை அமைக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த வழித்தடத்தில் வரும் பீன்யா மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்டர்சேஞ்ச் அமைக்க, மெட்ரோ நிர்வாகம் முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால், அங்கு இன்டர்சேஞ்ச் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, முதலில் முன்மொழியப்பட்டதை விட பாதை அமைக்கும்போது உயரம் அதிகரிக்கும்; செலவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், பீன்யாவிற்கு பதிலாக கோரகுன்டேபாளையாவில் இன்டர்சேஞ்ச் அமைக்க, மெட்ரோ நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோரகுன்டேபாளையா துமகூரு ரோட்டில் உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம். அங்கு இன்டர்சேஞ்ச் அமைத்தால் சரியாக வருமா என்றும் அதிகாரிகள் யோசிக்கின்றனர்.
ஆனால், இங்கு இன்டர்சேஞ்ச் வந்தால் வெளிவட்ட சாலைக்கு செல்வோருக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மக்களிடம் கருத்துகளை கேட்க மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.