ADDED : அக் 04, 2024 07:18 PM
புதுடில்லி:டில்லி மெட்ரோ ரயில் சேவையின் மஞ்சள் வழித் தடத்தில் விஸ்வ வித்யாலயா மற்றும் காஷ்மீர் கேட் நிலையங்களுக்கு இடையே நாளை பராமரிப்பு பணி செய்யப்படுவதால், காலை 6:00 மணி முதல் 6:40 மணி வரை ரயில் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
டில்லி மெட்ரோ ரயில் சேவையின் மஞ்சள் வழித்தடத்தில், டில்லியின் சமய்பூர் பட்லி - ஹரியானா மாநிலம் குருகிராம் மில்லினியம் சிட்டி சென்டர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
இந்தத் தடத்தில் விஸ்வ வித்யாலயா - காஷ்மீரி கேட் ஆகிய நிலையங்களுக்கு இடையே நாளை காலை பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. எனவே, நாளை காலை 6:00 மணி முதல் 6:40 மணி வரை நாற்பது நிமிடங்களுக்கு இந்த இரு நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் ரயில் நாளை காலை 6:00 மணிக்கு பதிலாக 6:45 மணிக்கு விஸ்வ வித்யாலயா நிலையத்தில் இருந்து புறப்பட்டு மில்லினியம் சிட்டி சென்டர் செல்லும். அதேபோல, காஷ்மீர் கேட் நிலையத்தில் இருந்து சமய்பூர் பட்லிக்கு முதல் ரயில் காலை 6.52 மணிக்கு புறப்படும்.
காலை 6.40 மணிக்கு ரயில் சேவை துவங்கும் வரை விதான் சபா மற்றும் சிவில் லைன்ஸ் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.