இந்திய பொருட்கள் மீது 50% வரி மெக்சிகோ அரசு அறிவிப்பு
இந்திய பொருட்கள் மீது 50% வரி மெக்சிகோ அரசு அறிவிப்பு
ADDED : டிச 12, 2025 04:54 AM

புதுடில்லி: குறிப்பிட்ட சில இந்திய பொருட்களின் இறக்குமதி மீது, மெக்சிகோ 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, நெகிழி, ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மீது, 50 சதவீதம் வரை வரி விதிக்கும் புதிய சட்டத்துக்கு, அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே இந்தியா மட்டுமல்லாது சீனா, தென் கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளுக்கும் இந்த வரி பொருந்தும்.
வரும் ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மெக்சிகோ அரசுக்கு 33,910 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாத்து, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்காவை தன் பக்கம் இழுக்கவே அந்நாடு இந்த முடிவை எடுத்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மெக்சிகோவின் ஒன்பதாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது நம் நாட்டில் இருந்து கார்கள், வாகன உதிரிபாகங்கள், பயணியர் வாகனங்கள் மெக்சிகோவுக்கு அதிக ஏற்றுமதி

