sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மைக்ரோசாப்ட் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு; மலரும் நினைவுகளில் மூழ்கிய பில்கேட்ஸ்!

/

மைக்ரோசாப்ட் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு; மலரும் நினைவுகளில் மூழ்கிய பில்கேட்ஸ்!

மைக்ரோசாப்ட் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு; மலரும் நினைவுகளில் மூழ்கிய பில்கேட்ஸ்!

மைக்ரோசாப்ட் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு; மலரும் நினைவுகளில் மூழ்கிய பில்கேட்ஸ்!

6


ADDED : ஏப் 04, 2025 10:45 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 10:45 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி தன் உருக்கமான நினைவுகளை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏப்ரல் 4ம் தேதி, 1975ம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இன்றைய தொழில்நுட்ப உலகில் யாராலும் தவிர்க்க முடியாத ஒரு நிறுவனமாக மைக்ரோசாப்ட் மாறிவிட்டது. அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பேரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்று 2.28 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர்.

50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பில்கேட்ஸ் உருக்கமான நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; 50 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய சாதனை. ஸ்டீவ் பால்மர் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற முன்னோடி தலைவர்கள் இல்லாமல் இந்த சாதனைகள் சாத்தியமில்லை. இந்த நிறுவனத்துக்கான முதல் கோடிங் ப்ரோக்ராமை நேற்றுதான் எழுதியது போல் இருக்கிறது.

எப்படி இந்த நிறுவனம் உருவானது? நானும், பால் ஆலனும் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் இதழ் வெளியிட்ட அட்டைப்பட கட்டுரையை பார்த்தோம். அதில், மிட்ஸ் என்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய கம்ப்யூட்டர் பற்றிய கட்டுரை இருந்தது. அப்போதே, பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி வரப்போகிறது என்பதை நாங்கள் இருவரும் புரிந்து கொண்டோம்.

அதில் முன்னணியில் இருக்கவும் நாங்கள் இருவரும் விரும்பினோம். அந்தக் காலத்தில் பர்சனல் கம்ப்யூட்டர்கள் எங்கும் கிடையாது. நாங்கள் அந்த மிட்ஸ் நிறுவன கம்ப்யூட்டருக்கு ஏற்ற ப்ரோக்ராம் தயார் செய்ய முடியும் என்று அதன் உரிமையாளரை நேரில் சந்தித்து கூறினோம். அவர் ஒப்புக்கொண்டார்.

அதற்கென நாங்கள் பேசிக் என்ற கம்ப்யூட்டர் மொழியை கற்றுக் கொண்டு, ப்ரோக்ராமிங் செய்தோம். அப்படி உருவானது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம். இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில், மைக்ரோசாப்ட் தனிப்பட்ட கணினிகளுக்கான (personal computers) மென்பொருட்களை உருவாக்கியது.

இந்நிலையில், தனது பில்கேட்ஸ் தனது நிறுவனம் தொடங்கியது போது சந்தித்த சவால்கள் குறித்து தெரிவித்துள்ளார். தான் எழுதிய கோடிங்-ஐ ((coding)பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார். அவர், இது நான் எழுதியதிலேயே மிகவும் அருமையான கோடிங் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகினார். தற்போது, அந்த பதவியில் சத்யா நாதெல்லா இருக்கிறார். தற்போதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 2.84 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பு 238 லட்சத்து 27 ஆயிரத்து 622 கோடி ரூபாய்) ஆகும்.

யார் இந்த பில்கேட்ஸ்?


* 1955ம் ஆண்டில் அமெரிக்காவின் வட மேற்கு மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரத்தில் பிறந்து, தனது 20வது வயதில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்.

* இவரது தந்தை வில்லியம் கெச் கேட்ஸ், ஒரு சிறந்த வழக்கறிஞர். வாஷிங்டன் பல்கலை ஆசிரியராக தாய் மேரி மேக்ஸ்வெல் இருந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.

* இவரது கணினி ஆர்வத்தையும், திறமையையும் கண்டு ஆசிரியர்கள் மெய் சிலிர்த்தனர். சிறு வயது முதலே கோடிங் எழுதுவதில் ஆர்வமுள்ளவர்.

* பில்கேட்ஸ் தன் சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை உலகம் முழுவதும் நற்பணிகள் செய்வதற்கு வழங்குகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கும் பெருமளவு நிதி உதவி வழங்குகிறார்.






      Dinamalar
      Follow us