இடுக்கியில் புதிய சுற்றுலா பகுதி மைக்ரோவேவ் வியூ பாய்ன்ட்
இடுக்கியில் புதிய சுற்றுலா பகுதி மைக்ரோவேவ் வியூ பாய்ன்ட்
ADDED : செப் 18, 2025 02:50 AM

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா வரை படத்தில் வனத்துறை சார்பிலான ' மைக்ரோவேவ் வியூ பாய்ன்ட்' புதிதாக இடம் பிடித்து உள்ளது.
இம்மாவட்டத்தில் தலைமையிடமான பைனாவ் அருகே ' மைக்ரோவேவ் வியூ பாய்ன்ட்' அமைந்துள்ளது. மலைப் பகுதியில் வெண் மேகங்கள் தவழ்ந்து செல்ல கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கையான சுற்றுச் சூழலை உள்ளூர் மக்கள் மட்டும் ரசித்து வந்தனர். அதனை அறிந்து சுற்றுலா பயணிகள் செல்ல துவங்கினர்.
வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு புதிய சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்பட்டது.
ரசிக்கலாம்: இப்பகுதியில் இருந்து வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணையின் நீர் தேக்கம், தென் இந்தியாவின் உயரமான ஆனமுடி சிகரம், சொக்கர் முடி, பால்குளம்மேடு, தோப்புராம்குடி, உதயகிரி மலைகள், கேப் ரோடு, பள்ளிவாசல், வெள்ளத் தூவல், பூப்பாறை, கள்ளிப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளை ரசிக்கலாம். அங்கிருந்து சூரியன் அஸ்தமனத்தையும் காணலாம். காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு களையும் பார்க்க முடியும்.
நேரம்: அங்கு காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை செல்லலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.40. சிறுவர் களுக்கு ரூ.20.
செல்லும் வழி: தொடுபுழா, செருதோணி மாநில நெடுஞ்சாலையிலில் பைனாவ் அருகே உள்ள பாதையில் சிறிது துாரம் சென்றால் 'மைக்ரோவேவ் வியூ பாய்ன்ட்'க்கு செல்லலாம். அதில் சாகசமாக பயணிப்பதும் தனி சுகம் தான்.

